IPL 2023: கத்துக்குட்டி புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் வெற்றி வாகை சூடுமா?
புவனேஸ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தன் ராயல்ஸ் அணியை வெற்றியுடன் தொடரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் குஜதாத் டைட்டன்ஸ் அணியும், 2ஆவது போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் கிங்ச் அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து நேற்று இரவு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 3 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
IPL 2023: இம்பேக்ட் பிளேயர் செய்த வேலய பாருங்க; வந்தாரு நின்னாரு சிக்ஸ் அடிச்சாரு ஓடியே போயிட்டாரு!
இதையடுத்து இன்று நடக்கும் 4ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சனை கழற்றிவிட்ட நிலையில், எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2023: நாங்க எப்படி ஜெயிச்சோமுன்னே தெரியாது; ஏனா பிட்ச் அப்படி: கேஎல் ராகுல் ஓபன் டாக்!
அவர், தற்போது நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஆகையால் அவர் இன்று நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார். அவருடன் இணைந்து மார்கோ ஜேன்சன், ஹென்ரிக் கிளாசன் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள்.
IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!
இதன் காரணமாக ஹதராபாத் அணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அடுத்த போட்டிக்கு முன்னதாக அணியில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மார்க்ரம் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் அணியை வழிநடத்த உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹாரி புரூக்ஸ், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷீத், நடராஜன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஹர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது. அணியில் ஜோ ரூட், ஜேசன் ஹோல்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!