IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!

ஐபிஎல் கிர்க்கெட்டின் லெஜெண்ட் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார்.
 

Chennai Super Kings will not go to the play-off round says Chris Gayle

கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தன. இந்த இரு அணிகளுமே 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடித்தன. ஆனால், ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றன. இதில், ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனானது.

ஐஐடி மெட்ராஸின் ஐபிஎல் ’கிரிக்கெட் அண்ட் கோடிங்’ தரவு அறிவியல் போட்டி அறிவிப்பு!

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியதோடு இதனால் தான் தான் சாம்பியன் என்பதை சொல்லாமல் சொல்லியது.

IPL 2023 CSK: ஐபிஎல்லில் புதிய அத்தியாயம் படைத்த தோனி: சிஎஸ்கேவுக்கு 200ஆவது சிக்ஸ் அடித்து கொடுத்த தல!

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக முன்னாள் கிர்க்கெட் வீரர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் என்று பலரும் எந்தெந்த அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்பது குறித்து இப்போதே கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடையாது என்று கூறியுள்ளார்.

IPL 2023 KKR: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 போட்டிகளில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

மேலும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இந்த இரு அணிகளுமே கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இல்லாதது அந்த அணிக்கு பலவீனமானதாக இருந்தாலும், மற்ற வீரர்கள், ஆல் ரவுண்டர்கள் ஆகியோரை வைத்துப் பார்க்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயலஸ் ஆகிய அணிகள் சம பலத்துடன் இருப்பதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்று கணிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios