ஐஐடி மெட்ராஸின் ஐபிஎல் ’கிரிக்கெட் அண்ட் கோடிங்’ தரவு அறிவியல் போட்டி அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக தரவு அறிவியல் போட்டியை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன்களில் சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறப்பான அணிகள், போட்டியின் முடிவுகள் போன்ற தரவுகளை பயன்படுத்தி பல்வேறு போட்டிகளுக்கான பவர் பிளே ஸ்கோர் எப்படி கணித்து உருவாக்குவதே ஐஐடி மெட்ராஸின் நோக்கம். நேற்று தொடங்கப்பட்ட ஐபிஎல்லை அடிப்படையாகக் கொண்டு பிஎஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்), என்பிடெல் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியை தொடங்கியுள்ளன.
கிரிக்கெட் அண்ட் கோடிங் என்ற தலைப்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் நுட்பங்களின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தரவை பகுப்பாய்வு செய்வதற்கு திறமை வாய்ந்த தரவு விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும் அழைக்கப்படுகிறார்கள். வரும் 13 ஆம் தேதி வரையில் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/ipl-contest என்ற இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து பங்கேற்கலாம்.
IPL 2023 KKR: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 போட்டிகளில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
கோடிங் தெரியாதவர்களும் பங்கேற்கலாம்:
கோடிங்கில் அடிப்படை அறிவும், தரவு அறிவியலில் ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். கோடிங் தெரியாதவர்கள் கூட இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். புரோகிராமர்கள் அல்லாதோர் எந்தவொரு கோடிங்கும் எழுதாமல் 'ஸ்கோரை ஊகித்தல்’ என்ற நிகழ்வில் பங்கேற்கலாம். இது குறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்: ஆண்ட்ரூ தங்கராஜ் கூறியிருப்பதாவது: தரவு அறிவியல் (Data Science) மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் போட்டி நடக்கிறது. ஐபிஎல், தரவு அறிவியல் ஆகிய இரண்டும் இன்றைய காலகட்டத்தில் சிறந்து விளங்கும் வகையில், தரவு அறிவியல் கற்போருக்கு அவர்களது பகுப்பாய்வு திறன்களை தற்போது உள்ள துறைகளில் வெளிப்படுத்த இந்தப் போட்டி ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.
IPL 2023 CSK: சிஎஸ்கே தோல்விக்கு ஷிவம் துபே தான் காரணமா? இவரெல்லாம் எதுக்கு எடுத்தாங்க?
கடந்த ஐபிஎல் ஆட்டங்களின்போது வீரர்களின் செயல்திறன், அணியின் செயல்திறன், போட்டி முடிவுகள் எவ்வாறு இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தரவுத் தொகுப்புகள் இப்போட்டியில் பங்கேற்போருக்கு வழங்கப்பட உள்ளன. தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் பவர் பிளே ஸ்கோர்கள் பற்றிய கணிப்புகளை உருவாக்க இந்தத் தரவைப் பயன்படுத்துவதுதான் இப்போட்டியின் நோக்கமாகும்.
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!
ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. கணிக்கப்பட்ட மற்றும் உண்மையான மதிப்பெண்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் அடிப்படையில் போட்டியாளார்கள் புள்ளிகளைப் பெறுவார்கள். போட்டியின் நிறைவில் சிறப்பாகச் செயல்படும் போட்டியாளர்களுக்கு 'பாரடாக்ஸ் 2023' எனப்படும் வருடாந்திர பி.எஸ். புரோகிராம் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார நிகழ்வில் கவர்ச்சியான பரிசுகளுடன் கவுரவமும், அங்கீகாரமும் வழங்கப்படும்.
புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆர்வமுடையவர்கள் ஐஜடி மெட்ராஸ்-ல் படிக்க விரும்பினால் பிஎஸ் பட்டப்படிப்பு, என்பிடெல் ஆகிய இரண்டும் தனித்துவான வாய்ப்பை வழங்குகின்றன. மேலும் விவரங்களை https://study.iitm.ac.in/ds/ https://nptel.ac.in./ ஆகிய இணையதளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.