IPL 2023 CSK: சிஎஸ்கே தோல்விக்கு ஷிவம் துபே தான் காரணமா? இவரெல்லாம் எதுக்கு எடுத்தாங்க?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே ஷிவம் துபே அதிக ரன்கள் அடிக்காதது தான் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 

Shivam Dube is the reason to CSK getting low score against Gujarat Titans in IPL 2023

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், புகழ்பெற்ற இந்திய பாடகர் அரிஜித் சிங், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி தொடங்கப்பட்டது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!

அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச, அடுத்த 10 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் சேர்த்து 8 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார்.

IPL 2023: சிக்ஸரை தடுக்க சென்று காலை உடைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!

பின்னர், ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஆவது ஓவரில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக அகமதாபாத் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிய முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சீசனில் நடந்த 2 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகளிலுமே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

IPL Opening Ceremony: நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா!

ஆனால், ஐபிஎல் 2023ன் 16ஆவது சீசனுக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஷிவம் துபே என்று சொல்லப்படுகிறது. சிஎஸ்கே முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. அப்படியே சென்றால் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும். ஆனால், சிஎஸ்கே அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அம்பத்தி ராயுடு போட்டியின் 12.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிவம் துபே களமிறங்கினார். அப்போது சென்னை 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு விக்கெட் கையில் இருக்கும் நிலையில் ஓவருக்கு 10 ரன்கள் எடுத்திருந்தால் கூட எளிதாக 200 ரன்கள் எடுத்திருக்கும். ஆனால், ஷிவம் துபே அடிக்கத் தெரியாதவன் கையில் பேட்டை கொடுத்தால் என்ன செய்வானோ அதே போன்று அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் சுற்றிக் கொண்டே இருந்தார். இதனால், ருதுராஜ் கெய்க்வாடேவுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் அவுட்டானதும், வந்த ஜடேஜாவிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் அடித்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்தார்.

IPL 2023: ஊ ஆண்டவா, ஊஊ ஆண்டவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா; இருக்கையில் இருந்தே ரசித்த எம் எஸ் தோனி!

இதன் காரணமாக ஷிவம் துபேவிற்குப் பதிலாக தீபக் சாஹருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஷிவம் துபே 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios