Asianet News TamilAsianet News Tamil

IPL Opening Ceremony: நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள சாமி சாமி என்ற பாடல் உள்பட பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார்.
 

Rashmika Mandanna Dance For Pushpa and RRR Movie Naatu Naatu Song in IPL Opening Ceremony 2023
Author
First Published Mar 31, 2023, 7:24 PM IST

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் திருவிழாவை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மந்திரா பேடி தொகுத்து வழங்கினார். நாடு முழுவதும் 12 மைதானங்களில் நடக்கும் 10 அணிகளின் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

IPL 2023: ஊ ஆண்டவா, ஊஊ ஆண்டவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா; இருக்கையில் இருந்தே ரசித்த எம் எஸ் தோனி!

பாலிவுட் பாடல், வந்தே மாதரம் பாடல் பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். ஆலியா பட் நடித்த ராஸி படத்தில் தான் பாடிய Ae Vatan என்ற பாடலை பாடினார். அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியை ஹர்திக் பாண்டியா மைதானத்தில் நின்றபடி ரசித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமன்னா தமிழ் பாடலுக்கு நடனம் ஆடினார். மால டம் டம், மஞ்சர டம் டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா, தொடர்ந்து புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ ஆண்டவா, உ ஊ ஆண்டவா பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதன் பிறகு பாலிவுட் பாடலுக்கும் டான்ஸ் ஆடினார்.

7ஆவது வீரராக சாதிக்க காத்திருக்கும் எங்க தல தோனி; இன்னும் 22 ரன்கள் தான்!

 

 

தமன்னாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. குஜராத் டைட்டன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது நடிப்பில் வந்த புஷ்பா படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல், புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வல்லி பாடலுக்கும் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஹர்திக் பாண்டியா மற்றும் எம் எஸ் தோனி உள்பட கிரிக்கெட் வீரர்களும் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா ஆகியோரது வருகை இருந்தது.

IPL Opening Ceremony: அர்ஜித் சிங் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஐபிஎல் 2023 திருவிழா!

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் டிராபியை கொண்டு வந்து மேடையில் வைத்தார். அனைவருக்கும் கை கொடுத்த ஹர்திக் பாண்டியா, தோனிக்கு மட்டும் கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios