IPL Opening Ceremony: அர்ஜித் சிங் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஐபிஎல் 2023 திருவிழா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழாவை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மந்திரா பேடி தொகுத்து வழங்க ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மந்திரா பேடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நாடு முழுவதும் 12 மைதாங்களில் நடக்கும் 10 அணிகளின் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
7ஆவது வீரராக சாதிக்க காத்திருக்கும் எங்க தல தோனி; இன்னும் 22 ரன்கள் தான்!
பாலிவுட் பாடல், வந்தே மாதரம் பாடல் பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். ஆலியா பட் நடித்த ராஸி படத்தில் தான் பாடிய Ae Vatan என்ற பாடலை பாடினார். அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியை ஹர்திக் பாண்டியா மைதானத்தில் நின்றபடி ரசித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமன்னா, ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த தொடக்க விழா முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது.
இதுவரையில் 2 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டியிலுமே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அகமதாபாத் மைதானத்தைப் பொறுத்தவரையில் இரு அணிகளும் விளையாடியது இல்லை. முதன் முறையாக இன்றைய போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.