IPL 2023: சிக்ஸரை தடுக்க சென்று காலை உடைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் சீசன் 16ன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கேன் வில்லியம்சன் சிக்ஸரை தடுக்கச் சென்று காலை உடைத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் பாடகர் அர்ஜித் சிங், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு போட்டி தொடங்க்கப்பட்டது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த நேற்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப்.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
IPL Opening Ceremony: நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா!
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அடித்து ஆடி 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் டெவான் கான்வே (1), மொயின் அலி(23), பென் ஸ்டோக்ஸ்(7), அம்பாதி ராயுடு(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷிவம் துபே 19 ரன்கள் அடித்தார். தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச 14 ரன்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், போட்டியில் 12.3 ஆவது ஓவரை ஜோஷுவா லிட்டில் வீசினார். எதிர்முனையில் கெய்க்வாட் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தார்.
7ஆவது வீரராக சாதிக்க காத்திருக்கும் எங்க தல தோனி; இன்னும் 22 ரன்கள் தான்!
அப்போது அவர் பந்தை சிக்சருக்கு விளாச பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த வில்லியம்சன் தாவி பந்தை கேட்ச் பிடித்தாலும் எல்லைக் கோட்டுக்குள் தூக்கி வீசிவிட்டு வலது காலை கீழே ஊன்றிய நிலையில் விழுந்துள்ளார். எனினும், பந்து பவுண்டரி லைனை தொடவே பவுண்டரி கொடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் குழு கைதாங்கலாக அவரை அழைத்துச் சென்றது. அதன் பிறகு குஜராத் அணி பேட்டிங் ஆடிய போது அவர் வரவேயில்லை. எனினும், குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
IPL Opening Ceremony: அர்ஜித் சிங் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஐபிஎல் 2023 திருவிழா!
இதுவரையில் அகமதாமாத் மைதானத்தில் இரு அணிகளும் விளையாடாத நிலையில், முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னையை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சீசனில் கூட மோதிய 2 போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.