IPL 2023: இம்பேக்ட் பிளேயர் செய்த வேலய பாருங்க; வந்தாரு நின்னாரு சிக்ஸ் அடிச்சாரு ஓடியே போயிட்டாரு!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக இம்பேக்ட் பிளேயராக வந்த கிருஷ்ணப்பா கவுதம் சிக்ஸ் அடித்து டெல்லி அணிக்கு பயத்தை காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு 16ஆவது சீசனுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசன் முதல் புதிய விதிமுறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆடும் லெவனுடன் சேர்த்து கூடுதல் வீரராக இம்பேக்ட் பிளேயர் என்று ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அந்த வீரரை ஆட்டத்தின் போக்கை பொறுத்து ஆட்டத்தின் இடையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
IPL 2023: நாங்க எப்படி ஜெயிச்சோமுன்னே தெரியாது; ஏனா பிட்ச் அப்படி: கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இதற்கு முன்னதாக நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் இம்பேக்ட் பிளேயர்கள் பயன்படுத்தப்பட்டாலும், அது போட்டியிலும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், நேற்றைய 3ஆவது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 19.5 ஓவர்கள் வரையில் 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது லக்னோ அணி கிருஷ்ணப்பா கவுதமை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது. அவர் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிவிட்டு மைதானத்திலிருந்து ஓடி வெளியில் சென்றார். இது டெல்லி அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது.
IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!
இதுதான் இம்பேக்ட் பிளேயர் வேலை. ஆனால், டெல்லி அணியில் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அமன் கான் டெல்லி அணிக்கு ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 193 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 143 ரன்கள் மட்டுமே சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வரும் 4 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டெல்லியின் ஹோம் மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!