IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!

ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பிராவோவின் விக்கெட் சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ் முறியடித்துள்ளார்.
 

Kolkata Knight Riders Umesh Yadav Breaks Bravo Wicket Record in IPL 2023 against Punjab Kings in Mohali

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் நிதிஷ் ராணா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டியிங் ஆடியது. இதில், ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி ஆரம்பமே அடிதடி காட்டினர். சிம்ரன் சிங் 23 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ராஜபக்‌ஷே 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜித்தேஷ் சர்மா (21), ஷிகர் தவான் (40), ஷிகந்தர் ராசா (16), சாம் கரண் (26 நாட் அவுட்), ஷாருக்கான் (11 நாட் அவுட்) என்று ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் கிங்ஸ் 191 ரன்கள் சேர்த்தது.

ஐஐடி மெட்ராஸின் ஐபிஎல் ’கிரிக்கெட் அண்ட் கோடிங்’ தரவு அறிவியல் போட்டி அறிவிப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுதி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த நிலையில், தான், இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக உமேஷ் யாதவ் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

IPL 2023 CSK: ஐபிஎல்லில் புதிய அத்தியாயம் படைத்த தோனி: சிஎஸ்கேவுக்கு 200ஆவது சிக்ஸ் அடித்து கொடுத்த தல!

தற்போது இந்தப் போட்டியில் ராஜபக்‌ஷேயின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 34 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios