IND vs AUS T20: டி20 சீரிஸ்க்கு யார் கேப்டன்? சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரானது, உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது.
பொறுப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் – 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி வெற்றி!
இந்த தொடர் வரும், நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் நடக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
NZ vs SL: நியூசிலாந்தின் பொறுமையை சோதித்த தீக்ஷனா – மதுஷங்கா: கடைசில இலங்கை 171க்கு ஆல் அவுட்!
இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஹைதராபாத்தில் நடக்க இருந்த போட்டியானது பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விரைவில், இந்திய அணியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சூர்யகுமார் யாதவ் இவர்களில் யாரேனும் ஒருவர் தான் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
என்னது இப்படி ஒரு புகைப்படமா? வைரலாகும் சாரா மற்றும் சுப்மன் கில் போலியான புகைப்படம்!
ஏற்கனவே கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த உலகக் கோப்பை தொடரிலிந்து விலகியுள்ளார். ஆதலால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி டி20 போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்று திரும்பியது. ஆதலால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. மற்றொரு புறம் சுப்மன் கில் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இருக்கின்றனர். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவும் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.