NZ vs SL: நியூசிலாந்தின் பொறுமையை சோதித்த தீக்ஷனா – மதுஷங்கா: கடைசில இலங்கை 171க்கு ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இதே போன்று இலங்கை வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 2 ரன்களில் டிம் சவுதி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து, சதீரா சமரவிக்ரமா 1 ரன்னில் டிரெண்ட் போல்ட் பந்தில் டேரில் மிட்செல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 22 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் இலங்கை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்த உலகக் கோப்பையில் குசால் பெரேரா பெற்றுள்ளார்.
என்னது இப்படி ஒரு புகைப்படமா? வைரலாகும் சாரா மற்றும் சுப்மன் கில் போலியான புகைப்படம்!
எனினும், குசால் பெரேரா நீண்ட நேரம் நீடிக்காமல் அவர் 28 பந்துகளில் 51 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களிலும், தனன்ஜெயா டி சில்வா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துஷ்மந்தா சமீரா 20 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக, மகீஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா இருவரும் 14 ஓவர்கள் வரையில் நிதானமாக நின்று விளையாடினர். இதில், 10ஆவது விக்கெட்டிற்கு தீக்ஷனா மற்றும் மதுஷங்கா இருவரும் 87 பந்துகள் பிடித்து 43 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலமாக இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், ஒரு பவுலராக தீக்ஷனா 38 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு கை கொடுத்தார்.
- Angelo Mathews
- Cricket ODI
- Dilshan Madushanka
- Dushmantha Chameera
- ICC Cricket World Cup 2023
- Kane Williamson
- Kusal Mendis
- Kusal Perera
- Lockie Ferguson
- Maheesh Theekshana
- New Zealand
- New Zealand vs Sri Lanka
- New Zealand vs Sri Lanka World Cup Match
- Rachin Ravindra
- Sri Lanka
- Tim Southee
- Trent Boult
- Watch NZ vs SL Live Score
- World Cup 2023
- World Cup NZ vs SL Venue