New Zealand vs Sri Lanka, Kusal Perera: உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்த குசால் பெரேரா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் இலங்கை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை குசால் பெரேரா பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இதே போன்று இலங்கை வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 2 ரன்களில் டிம் சவுதி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து, சதீரா சமரவிக்ரமா 1 ரன்னில் டிரெண்ட் போல்ட் பந்தில் டேரில் மிட்செல் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் தொடக்க வீரராக களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 22 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் இலங்கை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்த உலகக் கோப்பையில் குசால் பெரேரா பெற்றுள்ளார்.
நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து 1258 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய கிங் கோலி!
இதற்கு முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் கேப்டன் குசால் மெண்டிஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏஞ்சலோ மேத்யூஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். மேலும், 2015ல் தினேஷ் சண்டிமால் 22 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், குசால் பெரேரா நீண்ட நேரம் நீடிக்காமல் அவர் 28 பந்துகளில் 51 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இலங்கை அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
நாங்க தான் எல்லாம்: ஆல் இன் ஆல் அழகுராஜாவாக திகழும் இந்தியா நம்பர் 1!