நாங்க தான் எல்லாம்: ஆல் இன் ஆல் அழகுராஜாவாக திகழும் இந்தியா நம்பர் 1!
அனைத்து வித கிரிக்கெட்டில் மட்டுமின்றி பேட்டிங், பவுலிங்கிலும் இந்தியா தான் நம்பர் 1 அணியாக திகழ்கிறது.
உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்தியா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதோடு, ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது. அதற்கு உதாரணமாக ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை சொல்லலாம். சிறந்த அணியில் மட்டுமின்றி பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என்று எல்லாவற்றிலும் இந்தியா மற்றும் இந்திய அணி வீரர்களும் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் தான் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா தான் நம்பர் 1 அணியாக திகழ்கிறது.
England vs Netherlands: கடைசி வாய்ப்பையும் இழந்த நெதர்லாந்து – 4ஆவது அணியாக வெளியேற்றம்!
டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா தான் நம்பர் 1 அணியாக திகழ்கிறது. இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இந்தியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. மேலும், டி20 போட்டிகளுக்கான அணியிலும் இந்தியா தான் நம்பர் 1. இதே போன்று ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் பட்டியலிலும் இந்திய வீரர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
மொயீன் அலி, ஆடில் ரஷீத் சுழலில் 179 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து – இங்கிலாந்து 6ஆவது இடம்!
அதுவும், கடந்த 951 நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலிலும் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடத்தில் இருக்கிறார். மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்களின் பட்டியலில் அஸ்வின் தான் நம்பர் 1.
England vs Netherlands: முதல் முறையாக உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்!
இவ்வளவு ஏன், டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்களின் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டி20 போட்டியில் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார். இப்படி டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட், டி20 அணிகளின் பட்டியலில் மட்டுமின்றி, பேட்டிங், பவுலிங்கிலும் இந்திய வீரர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர்.