England vs Netherlands: முதல் முறையாக உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்!
நெதர்லாந்துக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி உலகக் கோப்பையில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியனானது. ஆனால், இந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் நீடித்தது. ஆனால், ஐசிசி உலகக் கோப்பைக்கான அரையிறுதிக்கு துளி கூட போட்டியில்லாமல் பரிதாபமாக இங்கிலாந்து 2ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 77 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து தனது, முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்தார். 50 ரன்களிலிருந்து 100 ரன்கள் அடிப்பதற்கு 20 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். கடைசியாக அவர் 84 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 8ஆவது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் மட்டுமே இந்தப் போட்டி உள்பட 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். குறைந்தபட்சமாக டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். மொத்தமாக, 220 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது.
England vs Netherlands: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து – டாஸ் வென்று பேட்டிங்!
- Ben Stokes
- CWC 2023
- Cricket
- ENG vs NED
- England
- England vs Netherlands 40th Match
- England vs Netherlands ODI World Cup Match
- England vs Netherlands World Cup Match
- Gus Atkinson
- ICC Cricket World Cup 2023
- Jos Butler
- Liam Livingstone
- Mark Wood
- Netherlands
- ODI
- Pune
- Scott Edwards
- Teja Nidamanuru
- Watch ENG vs NED Live Streaming
- World Cup 2023