அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து? சாம்பியன்ஸூக்கு தகுதி பெறுமா இலங்கை? நியூசி., டாஸ் வென்று பீல்டிங்!

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பையின் 41ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

New Zealand have won the toss and Choose to field first against Sri Lanka in 41st Match of World Cup at Bengaluru rsk

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதற்கு மாறாக, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்த நிலையில் தான் கடைசி ஒரு இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ரேஸில் இடம் பெற்றுள்ளன.

நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து 1258 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய கிங் கோலி!

இதில், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இன்று நடக்கும் 41ஆவது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறும். அப்படி 7ஆவது இடத்திற்கு முன்னேறும் பட்சத்தில் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும். இல்லையென்றால் அதுவும் காலி தான்.

நாங்க தான் எல்லாம்: ஆல் இன் ஆல் அழகுராஜாவாக திகழும் இந்தியா நம்பர் 1!

தற்போது இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறது. வரும், 11 ஆம் தேதி நடக்கும் கடைசி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். இதெல்லாம், இன்று இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து தீர்மானிக்கப்படும்.

இன்று நடக்கும் 41ஆவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்குப் பதிலாக லாக்கி ஃபெர்குசன் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், இலங்கை அணியில் கசுன் ரஜீதாவிற்குப் பதிலாக சமீகா கருணாரத்னே அணியில் இடம் பெற்றுள்ளார்.

England vs Netherlands: கடைசி வாய்ப்பையும் இழந்த நெதர்லாந்து – 4ஆவது அணியாக வெளியேற்றம்!

இலங்கை:

பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனன்ஜெயா டி சில்வா, சமீகா கருணாரத்னே, மகீஷ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா.

நியூசிலாந்து:

டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சேப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.

மொயீன் அலி, ஆடில் ரஷீத் சுழலில் 179 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து – இங்கிலாந்து 6ஆவது இடம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios