New Zealand vs Sri Lanka, Angelo Mathews:எதுக்குடா வம்பு; சீக்கிரமே போயிருவோம்– 1 நிமிடத்திலேயே வந்த மேத்யூஸ்!
இலங்கை வீரர் சரித் அசலங்கா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் வேகமாக மைதானத்திற்குள் வந்துள்ளார்.
பெங்களூருவில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், இதில் வந்த வேகத்திலேயே நிசாங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
என்னது இப்படி ஒரு புகைப்படமா? வைரலாகும் சாரா மற்றும் சுப்மன் கில் போலியான புகைப்படம்!
அடுத்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் நிலைத்து நிற்கவில்லை. அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சதீரா சமரவிக்ரமா 1 ரன்னிலும், சரித் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அசலங்கா ஆட்டமிழந்த அடுத்த நிமிடத்திலேயே ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்குள் வந்துள்ளார். அப்போது அவரிடம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஏதோ பேசியுள்ளார். இதே போன்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், ஹெல்மெட் குறித்தும் ஏதோ பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏஞ்சலோ மேத்யூஸ் 2 நிமிடத்திற்குள்ளாக களத்திற்கு வராத நிலையில் டைம் அவுட் முறையில் வங்கதேச வீரர்கள் நடுவரிடம் அவுட் அப்பீல் செய்தனர். நடுவரும், மூன்றாவது நடுவரிடம் செல்ல, இறுதியில் டைம் அவுட் முறையில் ஏஞ்சலோ மேத்யூஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
எனினும், ஏஞ்சலோ மேத்ஸ்யூஸ், வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நடுவரிடம் நான் உரிய நேரத்திற்குள் வந்துவிட்டேன் என்றும், உடைந்த ஹெல்மெட்டை மாற்ற சென்றேன் என்றும் முறையிட்டார். எனினும், அவர் முறையிட்டதற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், ஷாகிப் அல் ஹசன், அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதைத் தான் நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால், வேதனை அடைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் பரிதாபமாக வெளியேறினார்.
இந்தப் போட்டியில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதோடு, இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து பரிதாபமாக இலங்கை வெளியேறியது. இந்த நிலையில், தான் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் 1 நிடமித்திலேயே வந்துவிட்டதாக கிரிக்கெட் வர்ணனையின் போது வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து 1258 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய கிங் கோலி!