Asianet News TamilAsianet News Tamil

பொறுப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் – 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி வெற்றி!

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இன்னும் அரையிறுதிக்கு முழுவதுமாக முன்னேறவில்லை.

New Zealand Beat Sri Lanka by 5 Wicket Difference in 41st Match of World Cup 2023 at Bengaluru rsk
Author
First Published Nov 9, 2023, 9:33 PM IST | Last Updated Nov 9, 2023, 9:33 PM IST

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக குசால் பெர்ரேரா 51 ரன்கள் எடுத்தார்.

NZ vs SL: நியூசிலாந்தின் பொறுமையை சோதித்த தீக்‌ஷனா – மதுஷங்கா: கடைசில இலங்கை 171க்கு ஆல் அவுட்!

கடைசியாக, மகீஷ் தீக்‌ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா இருவரும் 14 ஓவர்கள் வரையில் நிதானமாக நின்று விளையாடினர். இதில், 10ஆவது விக்கெட்டிற்கு தீக்‌ஷனா மற்றும் மதுஷங்கா இருவரும் 87 பந்துகள் பிடித்து 43 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலமாக இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், ஒரு பவுலராக தீக்‌ஷனா 38 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு கை கொடுத்தார்.

New Zealand vs Sri Lanka, Angelo Mathews:எதுக்குடா வம்பு; சீக்கிரமே போயிருவோம்– 1 நிமிடத்திலேயே வந்த மேத்யூஸ்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே 45 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க் சேப்மேன் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு டேரில் மிட்செல் 43 ரன்களில் ஆட்டமிழக்கவே, கிளென் பிலிப்ஸ் மற்றும் டாம் லாதம் இருவரும் நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இறுதியாக நியூசிலாந்து 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

என்னது இப்படி ஒரு புகைப்படமா? வைரலாகும் சாரா மற்றும் சுப்மன் கில் போலியான புகைப்படம்!

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4ஆவது இடத்தில் நீடிக்கிறது. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு நெருங்கிவிட்ட நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 400 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு அமையும்.

இதே போன்று, வரும் 11 ஆம் தேதி நடக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 287 ரன்களில் வெற்றி பெற வேண்டும். சேஸ் செய்தால் 284 ரன்கள் எஞ்சியிருக்க வேண்டும். அதாவது, 16 பந்துகளில் வெற்றி பெற வேண்டும். அப்படியும் இல்லையென்றால் இங்கிலாந்தை 50 ரன்களுக்குள் சுருட்டினால் 2 ஓவரில் வெற்றி பெற வேண்டும், 100 ரன்கள் என்றால் 3 ஓவரில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இதெல்லாம் சாத்தியமில்லை.

New Zealand vs Sri Lanka, Kusal Perera: உலகக் கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்த குசால் பெரேரா!

ஆகையால் நியூசிலாந்து அணி தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படி நியூசிலாந்து அரையிறுதிக்கு சென்றா இந்தியா – நியூசிலாந்து அணிகள் வரும் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் மோதும். இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் தான்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios