ஸ்பின்னர்களுக்கு போட்ட ஸ்கெட்ச்: தானாக வந்து சிக்கிய இந்தியா- ரோவ்மன் பவல் டாக்!

இந்திய அணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள எங்களது இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியுள்ளார்.

West Indies Skipper Rovman Powell Talk about his victory against india in 2nd T20 at Guyana

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா டாஸ் வென்று முதலில் ஆடியது. அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா தனது சர்வதேச டி20 போட்டியில் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மலேசியாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா ஹாக்கி டீம்!

இஷான் கிஷான் 27 ரன்னும், ஹர்திக் பாண்டியா 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதில், 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

WI vs IND 2nd T20: வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: பவுலர்கள் அடித்து கொடுக்க கடைசில வெற்றி பெற்ற வெ.இ!

கடைசியாக வந்த அக்கீல் ஹூசைன் மற்றும் அல்சாரி ஜோசப் இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 7 பந்துகள் எஞ்சிய நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆவது முறையாக தொடர்ந்து டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

அவசரப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்; ஆறுதல் கொடுத்த திலக் வர்மா!

வெற்றிக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் டி20 தொடரை வென்றதில்லை. ஆனால், இப்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில் இருக்கிறோம். பந்து வீச்சாளர்களை ஒரு ஓவர்கள் வீசுவதற்கு மட்டுமே அழைத்தோம். அதற்கு காரணம் வெயிலின் தாக்கம் அதிகம். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரை சமாளிக்க நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் தான் சரியான தேர்வு. ஆதலா, அவர்களை செயபடுத்தினோம் என்று கூறியுள்ளார்.

அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios