பரிதாபமாக வெளியேறிய 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக பரிதாபமாக வெளியேறியுள்ளது.

West Indies for the first time World Cup History will not be part of the ICC Mens Cricket World Cup 2023

இந்தியாவில் நடக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஏற்கனவே 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், கடைசியாக உள்ள 2 இடத்திற்கான உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!

இதில், 10 அணிகள் இடம் பெற்று குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடின. இதில், முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி அமெரிக்கா, நேபாள், அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறின.

சன்னி சந்து அதிரடி: சேலம் ஸ்பார்டன்ஸ் 155 ரன்கள் குவிப்பு!

இதைத் தொடர்ந்து இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய அணிகள் உலகக் கோப்பை தகுதி சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்னேறின. இதில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 6 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!

இதையடுத்து இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரரான ஜான்சன் ஜார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷமர் ப்ரூக்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினார். அவரும் 0 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஷாய் கோப் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் 22 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நின்ற ஜேசன் ஹோல்டர் 45 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் 36 ரன்களிலும் ஆட்டமிழக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

உன் குத்தமா, என் குத்தமா? 11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன்: வேடிக்கை பார்த்த நடுவர்!

பந்து வீச்சு தரப்பில் ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் க்ரீவ்ஸ், கிறிஸ் சோல், மார்க் வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணியில் ஓபனிங் வீரர் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராண்டன் மெக்முல்லன் பொறுமையாக ஆடி 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜார்ஜ் முன்சே 18 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 13 ரன்கள் எடுக்க, தொடக்க வீரர் மேத்யூ கிராஸ் 74 ரன்கள் எடுக்கவே ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!

இந்த வெற்றியின் மூலமாக ஸ்காட்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் சுற்றிலிருந்து வெளியேறி, உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பை கோட்டைவிட்டது.

கடந்த 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் வாய்ப்பை உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே போன்று ஓமன் அணியும் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios