பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!

பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஆர்சிபி நட்சத்திரம் ஸ்ரேயங்கா பாட்டீல் பெற்றுள்ளார்.

Shreyanka Patil becomes first Indian player to play in Womens Caribbean Premier League 2023

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து அந்தந்த மாநிலங்களில் டிஎன்பிஎல், எம்பிஎல் கிரிக்கெட் போட்டிகளும், வெளியூர்களிலும் மேஜர் கிரிக்கெட் லீக், லங்கா பிரீமியர் லீக் என்று கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸிலும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2024 முதல் 2027 வரையில் இந்தியா விளையாடும் போட்டிகள் எத்தனை தெரியுமா?

இதில், ஆண்கள் கிரிக்கெட்டைப் போன்று பெண்களுக்கும் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதன் முதலாக வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்பட்டது. மூன்று அணிகள் இந்த லீக் போட்டிகளில் இடம் பெற்று விளையாடின. பார்படாஸ் ராயல்ஸ் அணி, கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஸ்குவாட் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?

ஒவ்வொரு அணியிலும் 16 வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளும், ஒரு அணிக்கு கூடுதலாக 3 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்று விளையாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

மூன்று அணிகள் இடம் பெற்று விளையாடும் பெண்கள் கரீபியன் லீக் போட்டியில் மொத்தம் 7 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தான் பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயங்கா பாட்டீல் இடம் பெற்றுள்ளார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாட உள்ளார்.

ஐபிஎல் போன்று முதல் முறையாக நடத்தப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடினார். சுழற்பந்து வீச்சாளரான இவர், மகளிர் பிரீமியர் லீக்கில் 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாக சர்வதேச லீக்கில் ஒப்பந்தம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

பெங்களூருவைச் சேர்ந்த பாட்டீல், மாநிலத்தின் U-16 அணியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் தற்போது உள்நாட்டில் கர்நாடகாவிற்காக விளையாடி வருகிறார். 2022-2023 மகளிர் சீனியர் ஒருநாள் டிராபியின் போது 21 வயதான அவர் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios