2024 முதல் 2027 வரையில் இந்தியா விளையாடும் போட்டிகள் எத்தனை தெரியுமா?

வரும் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியா 38 டெஸ்ட், 42 ஒரு நாள் போட்டி மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

India to play 141 Games in ICC FTP Schedule 2023-27

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

தேர்வுக்குழு தலைவராகும் அஜித் அகர்கர்? சம்பளம் மட்டும் ரூ.1 கோடி இல்லை?

இதைத் தொடர்ந்து அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதையடுத்து அடுத்த ஆண்டிற்கான போட்டிகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2023 -25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரில் பங்கேற்கின்றன. இதில் 3 ஹோம் மற்றும் 3 அவே டெஸ்ட் தொடர்கள் என்று 6 தொடர்கள் நடத்தப்படும்.  ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.

இதில், மொத்தமாக 27 தொடர்கள் மற்றும் 68 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் இந்தியா மொத்தமாக 141 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 61 டி20 போட்டிகள் அடங்கும்.

ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

ஆனால், எந்தெந்த அணிகளுடன் எப்போது போட்டிகள் நடக்கும் என்பது குறித்தும், இந்தியாவில் எத்தனை போட்டிகள் நடக்கிறது என்பது குறித்தும் எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios