சன்னி சந்து அதிரடி: சேலம் ஸ்பார்டன்ஸ் 155 ரன்கள் குவிப்பு!
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 155 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!
சன்னி சந்து மட்டும் நிலையான நின்று 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 61 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் குவித்தது.
பந்து வீச்சு தரப்பில் பி புவனேஷ்வரன் 4 ஓவர்கள் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாய் கிஷோர் மற்றும் திரிலோக் நாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அஜித் ராம் மற்றும் கோகுல்மூர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!