ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!
இங்கிலாந்தில் நடந்து வரும் விட்டலிட்டி பிளாஸ்ட் டி20 போட்டியில் நாட்டிங்காம் அணியைச் சேர்ந்த பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிதி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் Vitality blast டி20 என்ற தொடர் நடந்து வருகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 20ஆவது சீசன் தான் இந்த பிளாஸ்ட் டி20 தொடர். மொத்தம் 18 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 20 ஆம் தேதி மே மாதம் தொடங்கிய இந்த தொடர் வரும் 15ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இதில், நேற்று நடந்த போட்டியில் நாட்ஸ் அவுட்லாஸ் (நாட்டிங்காம்ஷயர்) அணி பர்மிங்காம் பீர்ஸ் (வார்விக்ஷயர்) அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நாட்டிங்காம்ஷயர் அணி முதலில் ஆடியது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாம் மோர்ஸ் 42 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 73 ரன்கள் குவித்தார்.
பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சு தரப்பில் நாட்டிங்காம்ஷயர் அணியில் ஹாசன் அலி மற்றும் ஜாக் லின்டாட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பர்மிங்காம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நாட்டிங்காம் அணியைச் சேர்ந்த பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிதி வீசிய முதல் ஓவரிலேயே பர்மிங்காம் அணியின் தொடக்க வீரரான அலெக்ஸ் டேவிஸ் 0 ரன்னில் முதல் பந்தில் வெளியேறினார். 2ஆவது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் ஆட்டமிழந்தார். 5ஆவது பந்தில் டான் மௌஸ்லே 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் எட் பர்னார்டு 0 ரன்னில் வெளியேறினார்.
2024 முதல் 2027 வரையில் இந்தியா விளையாடும் போட்டிகள் எத்தனை தெரியுமா?
இதன் மூலமாக ஷாகீன் அப்ரிதி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தினார். கிளென் மேக்ஸ்வெல் 19 ரன்களில் வெளியேறினார். ஜாகோப் பெத்தெல் 27 ரன்களிலும், ஜாக் லிண்டாட் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக பர்மிங்காம் அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 172 ரன்கள் குவித்து 5 பந்துகள் எஞ்சிய நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பர்மிங்காம் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?