உன் குத்தமா, என் குத்தமா? 11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன்: வேடிக்கை பார்த்த நடுவர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனை ஈடன் கார்சன் 11 ஓவர்கள் வீசியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து மகளிர் அணி ஐசிசி சாம்பியன்ஷிப் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!
இதைத் தொடர்ந்து நேற்று இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், நியூசிலாந்து மகளிர் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடியது. அதன்படி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து மகளிர் அணி 329 ரன்கள் குவித்தது. இதில், நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஷோபி டிவைன் 121 பந்துகளில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்தார்.
2024 முதல் 2027 வரையில் இந்தியா விளையாடும் போட்டிகள் எத்தனை தெரியுமா?
இதே போன்று மற்றொரு வீராங்கனையான மெலி கேர் தன் பங்கிற்கு 106 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்தார். இதையடுத்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே நியூசிலாந்து மகளிர் அணி 329 ரன்கள் குவித்தது. இதில், பந்து வீச்சு தரப்பில் இலங்கை மகளிர் அணி வீராங்கனை ஓஷதி ரணசிங்கா 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?
மற்றொரு வீராங்கனை உதேஷிகா பிரபோதனி 9 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சுகந்திகா குமாரி மற்றும் இனோகா ரணவீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணிக்கு முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள், விஷ்மி குணரத்னே (12), ஹர்ஷித சமரவிக்ரம (9), கேப்டன் சாமரி அட்டப்பட்டு (0), நிலாக்ஷி டி சில்வா (6) என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!
ஒரு கட்டத்தில் இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது தான், கவிஷா தில்ஹாரி களமிறங்கி அணியை மீட்டார். அவர் 98 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் குவித்தது.
ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!
பந்து வீச்சு தரப்பில் நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனை லியா தஹூஹூ 8 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஈடன் கார்சன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மெலி கெர், ஃபிரான் ஜோனாஸ், ஷோஃபி டிவைன் மற்றும் ஹன்னா ரோவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வரலாற்று சம்பவம் நடந்துள்ளது. அதாவது 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி என்றால் ஒவ்வொருவரும் தலா 10 ஓவர்கள் வரையில் தான் பந்து வீச வேண்டும். அப்படியிருக்கும் போது நியூசிலாந்து அணி வீராங்கனையான ஈடன் கார்சன் 11 ஓவர்கள் வரையில் பந்து வீசியுள்ளார். இதில், 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து மகளிர் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஈடன் கார்சன் வீசிய 11ஆவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. மேலும் 21வது நூற்றாண்டில் ODI போட்டியில் 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசிய முதல் நியூசிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஈடன் கார்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500 கோடி தரும் பிசிசிஐ; மாஸ் மைதானமாக மாறும் சென்னை சேப்பாக்கம்!
இதற்கு யாரை குற்றம் சொல்வது என்றே புரியவில்லை. 11ஆவது ஓவரை வீச கொடுத்த நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஷோஃபி டிவைனை குற்றம் சொல்வதா? அல்லது களத்தில் நடுவர்களாக இருந்த டெதுனு சில்வா மற்றும் சாந்த பொன்சேகா ஆகியோரை குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.