ரூ.500 கோடி தரும் பிசிசிஐ; மாஸ் மைதானமாக மாறும் சென்னை சேப்பாக்கம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கும் மைதானங்களில் உள்ள வசதியை மேம்படுத்துவதற்காக பிசிசிஐ ஒவ்வொரு மைதானத்திற்கும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த உலகக் கோப்பை தொடரானது, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய 10 மைதானங்களில் போட்டி நடக்கிறது.
ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக மைதானங்களில் உள்ள வசதியை மேம்படுத்துவதற்காக பிசிசிஐ ரூ.500 கோடி ஒதுக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு மைதானத்திற்கும் ரூ.50 கோடி வழங்கப்படுகிறது. தற்போது தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இதே போன்று தர்மசாலா மைதானத்திலும் புதிய அவுட்பீல்டு செய்யபட்டது. தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செம்மண் கலந்த ஆடுகளம் உருவாக்கப்பட உள்ளது.
மேலும், ஒவ்வொரு மைதானத்திலும் அடிப்படை வசதிகள் முதல் மேற்கூரை, விளையாடும் மைதானங்களிலும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. டெல்லி, லக்னோ, புனே ஆகிய மைதானங்கள் ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது பிசிசிஐ வழங்கும் ரூ.50 கோடி மூலமாக ஒவ்வொரு மைதானத்திலும் பல மாற்ற்றங்கள் செய்யப்பட உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?