ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரானை 42-32 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 8ஆவது முறையாக சாம்பியனானது.

ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் தென் கொரியாவின் பூசன் நகரில் நடந்தது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஈரானில் கோர்கன் பகுதியில் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது. இதையடுத்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவின் பூசன் நகரில் நடந்தது. இதில், இந்தியா அரையிறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?

இந்த நிலையில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணியை எதிர்கொண்டது. இதில், முதல் 5 நிமிடத்தில் ஈரான் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்டு ரைடு ஆடிய இந்திய அணியினர், போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஈரான் அணியை ஆல் அவுட் செய்தனர். இதில், இந்திய அணியின் கேப்டன் பவன் ஷெராவத் மற்றும் அஸ்லாம் இனாம்தார் ஆகியோர் சிறப்பாக ரைடு ஆடினர்.

5 போட்டியிலும் தோற்று முதல் அணியாக நடையை கட்டிய பா11சி திருச்சி!

ஈரான் அணியை ஆல் அவுட் செய்ததன் மூலமாக இந்திய அணியினர் புள்ளிகளை அதிகரித்தனர். எனினும், ஈரானுக்கு சில போனஸ் புள்ளிகளும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இந்திய அணியினர் 2ஆவது முறையாக ஈரான் அணியினரை ஆல் அவுட் செய்தனர்.

ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!

இதன் காரணமாக இந்தியா 23-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து சுதாரித்து கொண்டு ரைடு ஆடிய ஈரான் அணியினர் போட்டியின் 29ஆவது நிமிடத்தில் இந்தியாவை ஆல் அவுட் செய்தனர். கடைசியாக 2 நிமிடம் எஞ்சிய நிலையில், இந்தியா 38-31 என்று இருந்த நிலையில், இறுதியில் இந்தியா 42-32 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி 8ஆவது முறையாக சாம்பியனானது. இதுவரையில் 9 முறை ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடந்துள்ள நிலையில், இதில் 8 முறை இந்தியா தான் சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

இதற்கு முன்னதாக இந்தியா 1980, 1988, 2000, 2001, 2002, 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சாம்பியனாகியிருந்தது. 2003 ஆம் ஆண்டு ஈரான் அணி சாம்பியனானது. இந்த நிலையில், தற்போது 8ஆவது முறையாக இந்தியா மகுடம் சூடியுள்ளது.

Scroll to load tweet…