ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எல்லா போட்டியிலும் ரவீந்திர ஜடேஜா விளையாடினால், அவர் தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இருப்பார் என்று முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. கிட்டத்தட்ட 45 நாட்கள் நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதில், 48 போட்டிகள் நடத்தப்படுகிறது.
சாய் கிஷோர், விஜய் சங்கர் அதிரடியால் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 173 ரன்கள் குவிப்பு!
உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கிறது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதே போன்று இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதே போன்று 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடரின் அட்டவணை வெளியானதிலிருந்து முன்னாள் வீரர்கள் பலரும் உலகக் கோப்பையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், கோப்பையை வெல்லும் அணிகள் எது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பை அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ரவீந்திர ஜடேஜா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான போட்டிகள் - இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹேப்பி
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரவீந்திர ஜடேஜா மட்டும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எல்லா போட்டியிலும் விளையாடினால், உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக இருப்பார் என்று கூறியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 268 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதே போன்று 174 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 191 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆவது டெஸ்டின் நல்ல ஆரம்பம்; பளூதூக்கிய பேர்ஸ்டோவ்; அஸ்வின் கிண்டல் டுவீட்!