டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. இதில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் ஆஸி அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மழை காரணமாக போட்டி தாமதம்: திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!
அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிட் ஹெட் இருவரும் விளையாடி வருகின்றனர். இதில், ஸ்மித் 28 ரன்களாக இருந்த போது ஒரு பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை அவர் 99 போட்டிகளில் விளையாடி 174 இன்னிங்ஸில் படைத்துள்ளார். பிரையன் லாரா 101 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான போட்டிகள் - இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹேப்பி
இதற்கு முன்னதாக, குமார் சங்கக்கரா (172 இன்னிங்ஸ்), ராகுல் டிராவிட் (176 இன்னிங்ஸ்), பிரையன் லாரா (177 இன்னிங்ஸ்), ரிக்கி பாண்டிங் (177 இன்னிங்ஸ்) ஆகியோர் 9000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதே போன்று ஆஸி, சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பவுலர் என்ற சாதனையை படைத்ததோடு, தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 6ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
2ஆவது டெஸ்டின் நல்ல ஆரம்பம்; பளூதூக்கிய பேர்ஸ்டோவ்; அஸ்வின் கிண்டல் டுவீட்!