மழை காரணமாக போட்டி தாமதம்: திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங்!
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்றைய 20 ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் துலீப் டிராபி போட்டியில் விளையாட சென்றதால், எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான போட்டிகள் - இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹேப்பி
திண்டுக்கல் டிராகன்ஸ்:
பாபா இந்திரஜித் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), விமல் குமார், சிவம் சிங், பூபதி குமார், சி சரத் குமார், சுபோத் பதி, பி சரவணக்குமார், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, ஜி கிஷோர், ஆஷிக் ஸ்ரீநிவாஸ்.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:
எஸ் ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர், விஜய் சங்கர், பாலசந்தர் அனிருத், ராஜேந்திரன் விவேக், என் எஸ் சதுர்வேத் (கேப்டன்), எஸ் அஜித் ராம், அல்லிராஜ் கருப்பசாமி, பி புவனேஷ்வரன், ஜி பெரியசாமி
2ஆவது டெஸ்டின் நல்ல ஆரம்பம்; பளூதூக்கிய பேர்ஸ்டோவ்; அஸ்வின் கிண்டல் டுவீட்!
டாஸ் போடப்பட்டதைத் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. இனியும் மழை குறுக்கீடு இருந்தால் அப்போது ஓவர்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்ற பேர்ஸ்டோவ்; வைரலாகும் வீடியோ!
இதுவரையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. மாறாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.