மைதானத்திற்குள் புகுந்த போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்ற பேர்ஸ்டோவ்; வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது போராட்டக்காரர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Jonny Bairstow carrying one of the oil protestors in his shoulder during Eng vs Aus in 2nd Ashes Test Match at Lords

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இதில், டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் களமிறங்கினர்.

இன்ஸ்டா பதிவால் வந்த சர்ச்சை: ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒரே ரூம், ஒரே பதிவு!

முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இதில், 4ஆவது பந்தில் டேவிட் வார்னர் பவுண்டரி அடித்தார். இதையடுத்து 2ஆவது ஓவரை ஸ்டூவர் பிராட் வீச வந்தார். அப்போது மைதானத்திற்குள் புகுந்த போராட்டக்காரர் கையில் வைத்திருந்த வர்ண பொடியை கையில் எடுத்து மைதானத்தில் தூவினர். இதையடுத்து விக்கெட் கீப்பராக இருந்த ஜானி பேர்ஸ்டோவ் அந்த போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்று மைதானத்திற்கு வெளியில் கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார்.

அகமதாபாத்தில் உலகக் கோப்பை தொடர்: 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு நைட்டுக்கு வாடகை மட்டும் ரூ.50 ஆயிரமாம்!

 

 

இதற்கிடையில் மைதான பராமரிப்பாளர்கள் வந்து மைதானத்தை சுத்தம் செய்தனர். இதன் காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க வர்ணனையாளர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசியாக 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா; ஒரு நாளைக்கு 7 ஓவர்கள் பந்து வீசி பயிற்சி!

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios