அகமதாபாத்தில் உலகக் கோப்பை தொடர்: 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு நைட்டுக்கு வாடகை மட்டும் ரூ.50 ஆயிரமாம்!
அகமதாபாத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில், அங்குள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் வாடகை மட்டும் ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியும், இறுதியும் போட்டியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இவ்வளவு ஏன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கூட நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்கிறது.
ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா; ஒரு நாளைக்கு 7 ஓவர்கள் பந்து வீசி பயிற்சி!
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், அகமதாபாத் இப்போதே ஸ்கோர் அடிக்க தொடங்கியுள்ளது. ஆம், இன்னும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், அகமதாபாத் சிட்டி 3 மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்தாலும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஒரு இரவுக்கு வாடகை மட்டும் ரூ.50 ஆயிரமாக உள்ளது. இதுவே மற்ற நாட்களில் ரூ.6,500 முதல் ரூ.10,500 வரை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐடிசி நர்மதா ஹோட்டல் பொது மேலாளர் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக அக்டோபர் 13 முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரைக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக கிட்டத்தட்ட 60 முதல் 90 சதவிகித ஹோட்டல்களில் முன்பதிவு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ள நிலையில் இங்கிலாந்தில் உள்ள டிராவல் ஏஜென்ஸிஸ் நிறுவனங்கள் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹயாத் ரெஜென்சி ஹோட்டல் பொது மேலாளர் புனித் பைஜால் கூறியுள்ளார்.
விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் – சேவாக் கோரிக்கை!