இன்ஸ்டா பதிவால் வந்த சர்ச்சை: ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒரே ரூம், ஒரே பதிவு!
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தினேஷ் கார்த்திக்கின் மனைவியை முரளி விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதே போன்று இலங்கையில் தில்ஷனின் மனைவியை தரங்கா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், இதே போன்று ஒரு சம்பவம் தற்போது இந்திய கிரிக்கெட்டிலும் நடைபெற போவதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் உலகக் கோப்பை தொடர்: 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு நைட்டுக்கு வாடகை மட்டும் ரூ.50 ஆயிரமாம்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவை காதலித்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஷ்ரேயாஸ் ஐயரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா; ஒரு நாளைக்கு 7 ஓவர்கள் பந்து வீசி பயிற்சி!
இவ்வளவு ஏன், சமீபத்தில் கூட சாஹல் மன வேதனையடுந்து சில பதிவுகளை பதிவிட்டிருந்தார். இது குறித்து அப்போது தனஸ்ரீ வர்மா தமக்கும், சாஹலுக்கும் காதல் இருப்பதாகவும் நாங்கள் இருவரும் கணவர் மனைவியாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனஸ்ரீ வர்மா மும்பையிலுள்ள அடுக்குமாடி ஒன்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதே அடுக்குமாடியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த புகைப்படங்களை பார்க்கும் போது இருவரும் ஒன்றாக இருந்து அதாவது ஒரே இடத்திலிருந்து எடுத்து பதிவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!
மேலும், தனஸ்ரீ வர்மா இந்த ஸ்டோரிக்கு cigrettes after sex என்ற பாடலை போட்டு இருக்கிறார். இதன் காரணமாக சாஹலுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவர், தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்வது நல்லது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் – சேவாக் கோரிக்கை!