ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராகவும் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவில் நடக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டாக இடம் பெற உள்ளது. இதில், ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக ஷிகர் தவானும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
5 போட்டியிலும் தோற்று முதல் அணியாக நடையை கட்டிய பா11சி திருச்சி!
இதற்கு முக்கிய காரணம், இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்,3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. மேலும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
ஜியு-ஜிட்சு போட்டிக்கு இந்தியா தகுதி - ஜியு-ஜிட்சு வீரர் சித்தார்த் சிங்!
இதன் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஷிகர் தவால் கேப்டனாகவும், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராகவும் செயல்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஆசிய விளையாட்டு போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசியின் கீழ் வராததால், இது சர்வதேச கிரிக்கெட்டாக அங்கீகரிக்கப்படாது.
ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!
வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஷிகர் தவான் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2315 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்துய அணியில் இடம் பெற்று விளையாடினார். இலங்கை, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.