ஸ்டிக் ஊன்றி நடக்கும் நாதன் லயான்; இன்று விளையாட வாய்ப்பில்லை; ஆஸிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளின் போது ஆஸி, வீரர் நாதன் லயானுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியது.
இதில், முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 11 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். பின்னர், இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், ஸ்மித் 110 சேர்த்து ஆட்டமிழந்தார். கேரி கூடுதலாக 11 ரன்கள் சேர்த்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கம்மின்ஸ் 22 ரன்களில் வெளியேறவே, ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
ஆசிய விளையாட்டு போட்டி 2023: இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டன், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளர்?
இதில் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் நின்று முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராலி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் 42 ரன்களில் வெளியேறினார். ஜோ ரூட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பென் டக்கெட் 2 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 134 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 98 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!
ஹாரி ப்ரூக் 45 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. 2ஆம் நாளின் போது ஆஸீ, வீரர் நாதன் லயானுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக வெளியேறினார். அவர் 13 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
நாதன் லயானுக்கு காயம் ஏற்பட்டது, ஆஸி, அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடக்கும் 3ஆவது நாள் ஆட்டத்தின் போது நாதன் லயான் களமிறங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!