ஸ்பின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் – ரோவ்மன் பவல்!
சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே எங்களது தோல்விக்கு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. இதில், ஷாய் ஹோப் 45 ரன்களும், ஷிம்ரான் ஹெட்மயர் 61 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், அக்ஷர் படேல், சஹால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சுப்மன் கில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி வரை நின்று விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். திலக் வர்மா 7 ரன்கள் எடுக்கவே இந்தியா 17 ஓவர்களில் 179 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக இந்தியா 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் கூறியிருப்பதாவது: ஃபுளோரிடா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும். அப்படியிருக்கும் போது நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாகவே எடுத்துவிட்டோம். சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருந்தும் திட்டமிட்டபடி விளையாடவில்லை.
4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!
சிறப்பான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசும் போது தான் சில நேரங்களில் அழுத்தம் அதிகரிக்கும். தொடக்கத்தில் விளையாடியது போன்று மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்கள் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியதால் தொடர் 2-2 என்று சமனில் உள்ளது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!