மலேசியாவிற்கு எதிரான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

இந்தியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே மலேசியா அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதலில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதன் பிறகு முதல் பாதி ஆட்டத்தில் மலேசியா 3-1 என்று முன்னிலை வகித்தது.

நடப்பு சாம்பியன் கொரியாவை தோற்கடித்து 3ஆவது இடம் பிடித்த ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்!

அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக சாம்பியன் டைட்டிலை தட்டிச் சென்றது. இதன் மூலமாக முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த மலேசியா 2ஆவது இடம் பிடித்தது. இதற்கு முன்னதாக நடந்த 3ஆவது இடத்திற்கான போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வெண்கலப் பதக்கம் வென்றது.

தொடரை கைப்பற்ற 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் – சமன் செய்யுமா இந்தியா?

Scroll to load tweet…