WI vs IND 4th T20 Match: இளம் வயதில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்கள் நாட் அவுட் எடுத்து இளம் வயதில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று புளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி ஷாய் ஹோ 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார், யுஸ்வேந்திர சஹால் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
ஒருகட்டத்தில் சுப்மன் கில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா 7 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதோடு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது.
India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் 81 ரன்கள் எடுத்ததன் மூலமாக இளம் வயதில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 20 வயது 143 நாட்களில் அரைசதம் (நாட் அவுட்) எடுத்துள்ளார். திலக் வர்மா 20 வயது 271 நாட்கள் 51 ரன்கள் எடுத்துள்ளார்.
இதே போன்று, ரிஷப் பண்ட் 21 நாட்கள் 38 நாட்களில் 58 ரன்கள் எடுத்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஷ்வால் தனது 21 வயது 227 நாட்களில் 84 ரன்கள் நாட் அவுட் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு ஆட்டம் காட்டிய சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் – தொடரை சமன் செய்த இந்தியா!