வெஸ்ட் இண்டீஸுக்கு ஆட்டம் காட்டிய சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் – தொடரை சமன் செய்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது.

India Won By 9 wickets difference in 4th T20 Match against West Indies at Lauderhill, Florida

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டியிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது.

4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் மற்றும் ஓடியன் ஸ்மித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்டு, ஓடியன் ஸ்மித், அகீல் ஹூசைன், ஓபெட் மெக்காய்.

இந்தியா:

யஷஸ்வி ஜெஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சகால், முகேஷ் குமார்.

நடப்பு சாம்பியன் கொரியாவை தோற்கடித்து 3ஆவது இடம் பிடித்த ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்!

டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் அதிரடி காட்டினர். அதன் பிறகு அர்ஷ்தீப் சிங் ஓவரில் கைல் மேயர்ஸ் 17 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு கிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.  

இதையடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரோவ்மன் பவலும் அதே ஓவரில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஷாய் ஹோப் 45 ரன்கள் எடுத்த நிலையில் சகால் பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

தொடரை கைப்பற்ற 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் – சமன் செய்யுமா இந்தியா?

ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மயர் தன் பங்கிற்கு 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 61 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்தவர்கள் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக 20 ஓவர்களி 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தனர். கில், 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கினார். அவர் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

WI vs IND: லாடர்ஹில்லில் மோசமான ரெக்கார்டு வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்: 4ஆவது டி20 இந்தியாவிற்கு சாதகமா?

இறுதியாக இந்தியா 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தொடரையும் 2-2 என்று சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios