WI vs IND: லாடர்ஹில்லில் மோசமான ரெக்கார்டு வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்: 4ஆவது டி20 இந்தியாவிற்கு சாதகமா?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டி மழையால் பாதிக்கப்பட டிரா ஆனது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இத்தனை கோடியா? விளக்கம் கொடுத்த விராட் கோலி!
இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில் 3ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றது. இந்த நிலையில், தான் இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-1 என்று கைப்பற்றும். இதுவே இந்தியா வெற்றி பெற்றால் 2-2 என்று தொடர் சமன் ஆகும்.
தலைமை பயிற்சியாளர் லட்சுமணன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
இந்திய அணியைப் பொறுத்த வரையில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இஷான் கிஷானுக்குப் பதிலாக 3ஆவது டி20 போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வ 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் 3, 7, 6 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
இன்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு வீரரான திலக் வர்மாவும் தன் பங்கிற்கு ரன்கள் சேர்த்து வருகிறார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற மலேசியா – தொடர்ந்து 5 முறை 3ஆவது இடம்!
இதன் மூலமாக அவர் அசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சாம்சன் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானம், லாடர்ஹில்லில் நடக்கும் 4ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால், இதுவரையில் இந்தியா 6 டி20 போட்டிகளில் விளையாடி அதில், 4ல் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் இந்தியா தான் வென்றிருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி 2 டி20 போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த 4ஆவது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 191 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடந்த 5ஆவது டி20 போட்டியில் இந்தியா 188 ரன்கள் எடுத்தது. இதில், இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடியுள்ளனர். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஆவது டி20 உத்தேச அணி:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.