மலேசியாவிற்கு எதிராக நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே மலேசியா அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதலில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதன் பிறகு முதல் பாதி ஆட்டத்தில் மலேசியா 3-1 என்று முன்னிலை வகித்தது.
4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!
அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக சாம்பியன் டைட்டிலை தட்டிச் சென்றது. இதன் மூலமாக முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த மலேசியா 2ஆவது இடம் பிடித்தது. இதற்கு முன்னதாக நடந்த 3ஆவது இடத்திற்கான போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வெண்கலப் பதக்கம் வென்றது.
India vs Malaysia Final: மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், உதயநிதி ஸ்டாலின்!
வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிராபியை வழங்கி, தங்கப் பதக்கங்களை அணிவித்தார். மேலும், வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், பயிற்சியாளர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு ரூ.2.50 லட்சமும் என்று மொத்தமாக ரூ.1.10 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு ஆட்டம் காட்டிய சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் – தொடரை சமன் செய்த இந்தியா!
