India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
இந்தியாவிற்கு எதிரான 5 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெறவில்லை. மேலும், அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அணியின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை வீரரான இஷான் கிஷான் இடம் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்க், ஆடம் ஜம்பா, ஜோஸ் ஹசல்வுட்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர். வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் டேவிட் வார்னர் பவுண்டரி அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியா 16 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு பவுண்டரி அடித்து 1001 ரன்களை கடந்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலகக் கோப்பையில் 19 இன்னிங்ஸ் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார்.
வயதான கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் ரோகித் சர்மா!
இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டிவிலியர்ஸ் 20 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்துள்ளனர். சவுரவ் கங்குலி மற்றும் விவி ரிச்சர்ஸ் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளனர். மார்க் வாக் 22 இன்னிங்ஸ் விளையாடி 1000 ரன்களும், ஹெர்ஷல் கிப்ஸ் 22 இன்னிங்ஸ் விளையாடி 1000 ரன்களும் எடுத்துள்ளனர்.