வயதான கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் 36 வயதான இந்திய கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுகிறார்.

Rohit Sharma playing his first World Cup as Oldest captain for India rsk

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெறவில்லை. மேலும், அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அணியின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை வீரரான இஷான் கிஷான் இடம் பெற்றுள்ளார்.

IND vs AUS: சுப்மன் கில் இல்லை; 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் இந்தியா – டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்!

மேலும், இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், ரோகித் சர்மா ஒரு கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் இடம் பெற்ற அதிக வயதான கேப்டன்களில் ரோகித் சர்மா தான் சீனியர் பிளேயராக இடம் பெற்றிருக்கிறார். அவர், 36 வயது 161 நாட்களில் உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுகிறார்.

India vs Australia: 2011, 2015, 2019 உலகக் கோப்பைகளில் இந்தியா தோல்வி அடைந்த போட்டிகள் எத்தனை தெரியுமா?

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு அதிக வயதான கேப்டன்:

36 வயது 161 நாட்கள் – ரோகித் சர்மா

36 வயது 124 நாட்கள் - முகமது அசாருதீன் (1999)

34 வயது 71 நாட்கள் – ராகுல் டிராவிட் (2007)

34 வயது 56 நாட்கள் – ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன் (1979)

33 வயது 262 நாட்கள் – எம் எஸ் தோனி (2015)

ஒரு அணிக்கு எதிராக இந்தியா அதிகளவில் விளையாடிய ஒருநாள் போட்டிகள்:

167 vs இலங்கை

150 vs ஆஸ்திரேலியா (2023 – சென்னை சேப்பாக்கம் மைதானம்)*

142 vs வெஸ்ட் இண்டீஸ்

134 vs பாகிஸ்தான்

116 vs நியூசிலாந்து

106 vs இங்கிலாந்து

இந்திய அணியின் சீனியர் முதல் அறிமுகம் வரையில் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் 2019 அண்ட் 2023!

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்க், ஆடம் ஜம்பா, ஜோஸ் ஹசல்வுட்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios