Asianet News TamilAsianet News Tamil

India vs Australia: 2011, 2015, 2019 உலகக் கோப்பைகளில் இந்தியா தோல்வி அடைந்த போட்டிகள் எத்தனை தெரியுமா?

கடந்த 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்தியா விளையாடிய 26 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

Do you know how many matches India lost in 2011, 2015, 2019 World Cups? rsk
Author
First Published Oct 8, 2023, 1:37 PM IST | Last Updated Oct 8, 2023, 1:37 PM IST

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்தியா 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் சீனியர் முதல் அறிமுகம் வரையில் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் 2019 அண்ட் 2023!

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்தியா விளையாடிய 3 உலகக் கோப்பைகளில் 26 போட்டிகளில் மொத்தமாக 3 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இதில், ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதோடு, ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

இந்த நிலையில், தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில், இந்திய அணியின் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இன்று தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.

India vs Australia: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கெல்லாம் வாய்ப்பு? சுப்மன் கில் இடம் பெறுவாரா?

அவர் மட்டுமின்றி சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமாகின்றனர்.

India vs Australia: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு – போட்டி நடக்குமா? நடக்காதா?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios