IND vs AUS: சுப்மன் கில் இல்லை; 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் இந்தியா – டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்!
இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குகிறது. கூடுதலாக கிளென் மேக்ஸ்வெல் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்க், ஆடம் ஜம்பா, ஜோஸ் ஹசல்வுட்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இந்திய அணியின் சீனியர் முதல் அறிமுகம் வரையில் உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் 2019 அண்ட் 2023!
டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றுள்ளார். மேலும், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா தனது 3ஆவது உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். முதல் முறையாக ஒரு கேப்டனாக இன்றைய உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் 6 சதங்கள் இணைந்துள்ளார். இந்தியா 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
India vs Australia: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கெல்லாம் வாய்ப்பு? சுப்மன் கில் இடம் பெறுவாரா?
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சிறப்பு வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் நடந்த ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரையில் இரு அணிகளும் 149 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 56 போட்டிகளில் இந்தியாவும், 83 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் 150ஆவது போட்டியில் உலகக் கோப்பையில் விளையாடுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 12 உலகக் கோப்பை போட்டிகளில் 4ல் இந்தியாவும், 8ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு (316 ரன்கள்) எதிரான போட்டியில் இந்தியா (352 ரன்கள்) 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானம்:
இதுவரையில் 34 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும், 2ஆவதாக பேட்டிங் ஆடிய அணியானது, 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 224 ரன்கள். ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 205 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 337/7, குறைந்தபட்ச ஸ்கோர் 69/10. சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 291/2, குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து வெற்றி 171/10.
உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?
எதிர்பார்ப்பு:
அதிக ரன்கள் எடுக்கும் வீரர் – ரோகித் சர்மா அல்லது விராட் கோலி
அதிக விக்கெட் எடுக்கும் வீரர் – ஜஸ்ப்ரித் பும்ரா அல்லது குல்தீப் யாதவ்
ஆஸ்திரேலியா அணியில் அதிக விக்கெட் கைப்பற்றும் வீரர் – ஆடம் ஜம்பா அல்லது மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலியா அணியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டேவிட் வார்னர் அல்லது ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.