Asianet News TamilAsianet News Tamil

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

PM Modi MK Stalin congratulates Team Participated in Asian Games 2023 smp
Author
First Published Oct 8, 2023, 4:53 PM IST | Last Updated Dec 14, 2023, 8:39 AM IST

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  ஆசிய விளையாட்டு போட்டியில், 28 தங்கம் உள்பட 107 பதக்கங்களை இந்திய அணி வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு, 70 பதக்கங்கள் வென்றதே சிறந்த சாதனையாக இருந்தது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம் மற்றும் கடின உழைப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

 

 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை! நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம், கடின உழைப்பு ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களது வெற்றிகள், நாம்  நினைவில் கொள்ள வேண்டிய தருணங்களையும்,  நம் அனைவருக்கும் உத்வேகத்தையும்  அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும்  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் பறந்த டகோட்டா: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மாஸ் காட்டிய போர் விமானம்!

அதேபோல், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்! 107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர்.

 

 

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள். இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு!” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios