மீண்டும் பறந்த டகோட்டா: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மாஸ் காட்டிய போர் விமானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய டகோட்டா போர் விமானம் மீண்டும் வானில் பறந்துள்ளது
பாகிஸ்தானுக்கு எதிரான 1947-48 போரிலும், 1971 வங்காளதேச விடுதலைப் போரிலும் முக்கியப் பங்காற்றிய டகோட்டா போர் விமானம் தற்போது மீண்டும் வானில் பறந்துள்ளது. இந்த போர் விமானத்தை 2011ஆம் ஆண்டில் வாங்கிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதனை மறுசீரமைத்து தற்போது இந்திய விமானப்படைக்கு வழங்கியுள்ளார்.
டகோட்டா டிசி-3 விபி-905 போர் விமானம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு பிரிந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் தயாராக இருந்தது. அப்போது, காஷ்மீரைக் காப்பாற்ற பெரும் பங்காற்றிய டகோட்டா போர் விமானம், 1971 வங்கதேச விடுதலைப் போரிலும் முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவின் பழமையான விமானம் தற்போது மீண்டும் வானில் பறந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க டகோட்டா DC3 VP 905, பிரயாக்ராஜில் உள்ள இந்திய விமானப்படையின் ஃப்ளைஃபாஸ்ட் ஆண்டு விழாவிலும் பங்கேற்று பறக்கவுள்ளது.
முன்னதாக, கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்ற டகோட்டா போர் விமானம், ஸ்கிராப்பாக விற்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு இந்த இந்திய போர் விமானம் அயர்லாந்தில் விற்பனைக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அந்த விமானத்தை வாங்கினார். இந்தியாவின் போர் வரலாற்றில் விமானம் முக்கியப் பங்காற்றியதற்கும், நாட்டின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கும் முக்கிய காரணமாக டகோட்டா போர் விமானம் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த விமானத்தை அவர் வாங்கினார்.
அத்துடன், இந்த டகோட்டா விமானத்தின் பைலட்டாக ராஜீவ் சந்திரசேகரின் தந்தை ஏர் கமாண்டர் எம்.கே.சந்திரசேகர் இருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை: அடிக்கப்போகும் ஜாக்பாட் - ஹேப்பி நியூஸ்!
வரலாற்று சிறப்பு மிக்க டகோட்டா போர் விமானத்தை சொந்த செலவில் வாங்கி, அதை முழுமையாக மீட்டெடுத்து விமானப்படைக்கு பரிசளிக்க ராஜீவ் சந்திரசேகர் முன்வைத்த யோசனை, காங்கிரஸ் அரசில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கேஅந்தோனியால் நிராகரிக்கப்பட்டது. பின்னர், பாஜக அரசின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் இதனை ஏற்றுக்கொண்டார்.
விஷ்ணுவின் 6ஆவது அவதாரமான பரசுராமன் என்ற பெயரில், இந்த விமானம் 2018ஆம் ஆண்டில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. விமானத்தின் வால் பகுதியில் VP 905 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமானத்திற்கு, ஹிந்தனில் உள்ள விமானப்படை தளத்தில் உள்ள IF விண்டேஜ் ஸ்குவாட்ரானில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
“பரசுராமரின் விமானத்தை வரலாற்று பின்னணியுடன் பார்ப்பது நல்லது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டகோட்டா விமானத்திற்கு பழம்பெரும் அந்தஸ்து உள்ளது.” என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.