கலைஞர் மகளிர் உரிமை தொகை: அடிக்கப்போகும் ஜாக்பாட் - ஹேப்பி நியூஸ்!
கலைஞர் மகளிர் உரிமை தொகை இந்த மாதம் கூடுதலாக சில பெண்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கடந்த மாதம் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாகவே வரவு வைக்கப்படவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பெண் ஓட்டுநர்கள் பணி பிரிவு மாற்றம்: இந்திய ரயில்வே முடிவு!
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை இந்த மாதம் கூடுதலாக சில பெண்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெண்கள் பலரும் மேல்முறையீடு செய்து வருகின்றனர். அதில், சில விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என்பதால், அப்பெண்களுக்கும் இந்த மாதமே கலைஞர் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், கலைஞர் மகளிர் உரிமை தொகையை இந்த மாதம் கூடுதலாக சில பெண்கள் பெற வாய்ப்புள்ளது.