IND vs AUS: உலகக் கோப்பையில் அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த விராட் கோலி; கிங் எபோதும் கிங்கு தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் மிட்செல் மார்ஷ் கேட்சை பிடித்ததன் மூலமாக விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 15 கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெறவில்லை. மேலும், அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அணியின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை வீரரான இஷான் கிஷான் இடம் பெற்றுள்ளார்.
வயதான கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் ரோகித் சர்மா!
மேலும், இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், ரோகித் சர்மா ஒரு கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார். அதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் இடம் பெற்ற அதிக வயதான கேப்டன்களில் ரோகித் சர்மா தான் சீனியர் பிளேயராக இடம் பெற்றிருக்கிறார். அவர், 36 வயது 161 நாட்களில் உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடுகிறார். ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா போட்டியை பார்ப்பதற்கு வந்துள்ளார். இதே போன்று ரவிச்சந்திரனின் மனைவி பிரித்தி நாராயணன் மற்றும் மகள் அகீராவுடன் மைதானத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், விராட் கோலி பீல்டிங்கின் போது புதிய சாதனை படைத்துள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 2.2ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் கொடுத்த எளிதான கேட்சை ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலி பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் 15 கேட்சுகள் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக,
ஒருநாள் உலகக்கோப்பையில் (விக்கெட் கீப்பீர் அல்லாமல்) இந்தியாவுக்காக அதிக கேட்சுகள்:
15 - விராட் கோலி*
14 - அனில் கும்ப்ளே
12 - கபில் தேவ்
12 - சச்சின் டெண்டுல்கர்
ஆகியோர் அதிக கேட்சுகள் பிடித்துள்ளார். விராட் கோலி, ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார்.