WPL 2024 Schedule: பிப்ரவரி 22ல் மகளிர் பிரீமியர் லீக் 2024: மைதானம் குறித்து இறுதி கட்ட முடிவில் பிசிசிஐ!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The 2nd season of the Womens Premier League will be played from 22nd February to 17th March 2024 rsk

ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கும் ஆண்டுதோறும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் முறையாக டிராபியை வென்றது. இதையடுத்து 2ஆவது சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், 165 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.

Legends League Cricket 2023: சுரேஷ் ரெய்னா அணியை வீழ்த்தி சாம்பியனான ஹர்பஜன் சிங் அண்ட் கோ!

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் 3 ஸ்லாட், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 10 ஸ்லாட், மும்பை இந்தியன்ஸ் அணியில் 5, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 7 ஸ்லாட் மற்றும் யுபி வாரியர்ஸ் அணியில் 5 ஸ்லாட் என்று மொத்தமாக 9 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 30 வீராங்கனைகள் மட்டுமே டபிள்யூபிஎல் WPL 2024ல் ஏலம் எடுக்கப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அன்னபெல் சதர்லேண்ட் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த விருந்தா தினேஷ் தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்த நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் ரூ.1.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

West Indies vs England ODI Series: 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் சாதனை!

இதுவரையில் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விருந்தா தினேஷ் இடம் பெற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, இந்தியாவைச் சேர்ந்த கேஷ்வி கௌதம் தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்த நிலையில், அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் மகளிர் பிரீமியர் லீக் தொடரை வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரையில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 5 அணிகள் விளையாடும் மைதானங்கள் குறித்து இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை. ஒரே மைதானத்தில் நடத்தாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!

எனினும், போட்டியை நடத்த மும்பை மற்றும் பெங்களூரு சாத்தியமான இடங்களாக கருதப்பட்டாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில், தான் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் வழிகாட்டியான மிதாலி ராஜ் கூறியிருப்பதாவது: போட்டியை ஒரே இடத்தில் நடத்தாமல், பல்வேறு பகுதிகளில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஹோம் மற்றும் அவே போட்டிகளுக்கு இன்னும் சில காலம் நாம் காத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

WPL Auction 2024: மகளிர் பிரீமியர் லீக் – ஏலம் எடுக்கப்பட்ட மற்றும் விலை போகாத வீராங்கனைகளின் பட்டியல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios