மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் பாரதி ஃபுல்மாலி, மோனா மேஷ்ரம், பூனம் ராவுத், நவோமி ஸ்டாலன்பெர்க், மியா பவுச்சர், பிரியா புனியா உள்ளிட்ட வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படவில்லை.

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் மும்பையில் இன்று நடந்தது. இந்த தொடருக்கான ஏலத்திற்கு மட்டும் 165 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால், இதிலிருந்து வெறும் 9 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 30 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்த ஏலத்தை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2ஆவது முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.

INDW vs ENGW: 2ஆவது டி20 போட்டியில் மகளிர் இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி!

Scroll to load tweet…

மகளிர் பிரீமியர் லீக் 2024 – ஏலம் எடுக்கப்பட்ட மற்றும் ஏலம் எடுக்கப்படாத வீராங்கனைகளின் பட்டியல்:

  • ஃபோப் லிட்ச்பீல்டு – ஆஸ்திரேலியா (அடிப்படை விலை ரூ.30 லட்சம்) – ரூ.1 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
  • டேனி வியாட் – இங்கிலாந்து (அடிப்படை விலை ரூ.30 லட்சம்) – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.30 லட்சம் – யுபி வாரியர்ஸ்
  • பாரதி ஃபுல்மாலி – இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • மோனா மேஷ்ரம் - இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • வேதா கிருஷ்ணமூர்த்தி – இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.30 லட்சம்.
  • பூனம் ராவுத் - இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • நவோமி ஸ்டாலென்பெர்க் – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • மியா பவுச்சர் – இங்கிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.

India Women vs England Women T20: ஆறுதல் கொடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் – 80 ரன்களுக்கு சுருண்ட இந்திய மகளிர் அணி!

  • பிரியா புனியா – இந்தியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • ஜார்ஜ் வேர்ஹாம் – ஆஸ்திரேலியா – அடிப்படை விலை ரூ.40 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.40 லட்சம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • தேவிகா வைத்யா – இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • அன்னபெல் சதர்லேண்ட் – ஆஸ்திரேலியா – அடிப்படை விலை ரூ.40 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.2 கோடி – டெல்லி கேபிடல்ஸ்
  • எஸ் மேக்னா – இந்தியா – அடிப்படை விலை ரூ. 30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.30 லட்சம் – ஆர்சிபி.
  • டியாண்ட்ரா டாட்டின் – வெஸ்ட் இண்டீஸ் – அடிப்படை விலை ரூ.50 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சாமரி அத்தப்பத்து – இலங்கை – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • பெஸ் ஹீத் – இங்கிலாந்து – அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சுஷ்மா வர்மா – இந்தியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • எமி ஜோன்ஸ் – இங்கிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • டாமி பியூமண்ட் – இங்கிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • நுஜாத் பர்வீன் – இந்தியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.

ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வேதா கிருஷ்ணமூர்த்தி: குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!

  • லீ தஹூஹூ – நியூசிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • கிம் கெர்த் – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.50 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சிம்ரன் பகதூர் - அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.30 லட்சம் - ஆர்சிபி
  • ஷப்னம் இஸ்மாயில் – தென் ஆப்பிரிக்கா – அடிப்படை விலை ரூ.40 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.1.2 கோடி – மும்பை இந்தியன்ஸ்
  • ஷமிலியா கானல் -வெஸ்ட் இண்டீஸ் – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • கேட் கிராஸ் – இங்கிலாந்து – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.30 லட்சம் – ஆர்சிபி
  • அமாண்டா ஜாடே வெல்லிங்டன் – ஆஸ்திரேலியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • பிரீத்தி போஸ் – இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • ஏக்தா பிஸ்ட் – இந்தியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் - ஏலம் எடுக்கப்பட்ட தொகை ரூ.60 லட்சம் – ஆர்சிபி
  • அலனா கிங் – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.

Vrinda Dinesh: அடிப்படை விலையோ ரூ.10 லட்சம், ஏலம் எடுக்கப்பட்டதோ ரூ.1.3 கோடி: யார் இந்த விருந்தா தினேஷ்?

  • கோஹர் சுல்தானா – இந்தியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.30 லட்சம் – யுபி வாரியர்ஸ்
  • இனோகா ரணவீரா – இலங்கை - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • த்ரிஷ்யா I V - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • விருந்தா தினேஷ் - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.1.3 கோடி – யுபி வாரியர்ஸ்
  • த்ரிஷா பூஜிதா – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – குஜராத் ஜெயிண்ட்ஸ்
  • ஜாசியா அக்தர் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • ஆருஷி கோயல் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • ரிதிமா அகர்வால் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • சிம்ரன் ஷேக் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை

BCCI Net Worth Value: பிசிசிஐயின் சொத்து மதிப்பு ரூ.18,760 கோடி – இது ஆஸ்திரேலியாவை விட 28 மடங்கு அதிகம்!

  • ஜி திவ்யா – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • சாரா பிரைஸ் – ஸ்காட்லாந்து - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • அபர்ணா மோண்டல் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்ட்டது ரூ.10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • தீர்தா சதீஷ் – ஐக்கிய அரபு நாடுகள் - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • ஷிவாலி ஷிண்டே – இந்தியா - அடிப்படை விலை ரூ.20 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • உமா சேத்ரி – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை
  • கேஷ்வி கௌதம் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.2 கோடி – குஜராத் ஜெயிண்ட்ஸ்
  • பூனம் கேம்னர் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – யுபி வாரியர்ஸ்
  • எஸ் சஜனா – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.15 லட்சம் – மும்பை இந்தியன்ஸ
  • கௌதமி நாயக் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • அமன்தீப் கவுர் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • ஜி த்ரிஷா – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சைமா தாக்கூர் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – யுபி வாரியர்ஸ்
  • ராகவி பிஸ்ட் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • பருஷி பிரபாகர் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • ஹர்லி காலா – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • நிஷூ சௌத்ரி – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்குழு தலைவராக சஞ்சய் பங்கர் நியமனம்!

  • அதிதி சவுகான் – இந்தியா - அடிப்படை விலை ரூ.20 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை.
  • கோமல் ப்ரீத் கவுர் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • கோமல் சன்சாத் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • ஹாருங்பாம் சானு – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • ரேகா சிங் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • தாரா நாரிஸ் – அமெரிக்கா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • பருணிகா சிசோடியா – அமெரிக்கா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்படவில்லை
  • ப்ரியா மிஸ்ரா – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் - ஏலம் எடுக்கப்பட்டது ரூ.15 லட்சம் - ஆர்சிபி

ஆர்சிபி அணியில் விளையாடி டிராபி வெல்ல வேண்டும் – ஆஃப்கான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன்!

  • சுனந்தா எத்ரேகர் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சோனம் யாதவ் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • அமிஷா பகுகந்தி – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • நிக்கோலா கேரி – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • அலைஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் – இங்கிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • லாரன் சீட்டில் – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.30 லட்சம் – குஜராத் ஜெயிண்ட்ஸ்.
  • கிறிஸ்டி கார்டன் – இங்கிலாந்து - அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • தாரா குஜ்ஜர் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • கேத்ரின் பிரைஸ் – ஸ்காட்லாந்து – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – குஜராத் ஜெயிண்ட்ஸ்
  • மன்னத் காஷ்யப் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – குஜராத் ஜெயிண்ட்ஸ்
  • அஸ்வினி குமாரி – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – டெல்லி கேபிடல்ஸ்
  • நிக்கோலா ஹான்காக் – ஆஸ்திரேலியா -அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • மில்லிசென்ட் இல்லிங்வொர்த் – ஆஸ்திரேலியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • பாத்திமா ஜாஃபர் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்

BAN vs NZ 2nd Test: 180 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து; 3ஆம் நாள் முடிவில் வங்கதேசம் 30 ரன்கள் முன்னிலை!

  • கீர்த்தனா பாலகிருஷ்ணன் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – மும்பை இந்தியன்ஸ்
  • பைஜ் ஸ்கோல்ஃபீல்ட் – இங்கிலாந்து – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • அனுஷ்கா சர்மா – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • ஐரிஸ் ஸ்வில்லிங் – அயர்லாந்து – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • பாவனா கோப்லானி – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • தேவிகா, கே – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • பிரியங்கா கவுஷல் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சுபா சதீஷ் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் - ஆர்சிபி
  • தனிஷா சிங் – இந்தியா - அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்படவில்லை.
  • சோஃபி மோலினக்ஸ் – ஆஸ்திரேலியா – அடிப்படை விலை ரூ.30 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.30 லட்சம் - ஆர்சிபி
  • தரணும் பதான் – இந்தியா – அடிப்படை விலை ரூ.10 லட்சம் – ஏலம் எடுக்கப்பட்டது ரூ.10 லட்சம் – குஜராத் ஜெயிண்ட்ஸ்

Scroll to load tweet…